தலைமன்னாரில் முதல் கட்டமாக பைசர் (Pfizer ) தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு.
தலைமன்னார் பியர் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும் தலைமன்னார் புனித லோறன்சியா ஆலய வளாகம் போன்ற இடங்களில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிமுதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்திற்கு என 20 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையில் முதல் கட்டமாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட குறித்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், தொற்று நோய் விஞ்ஞான பிரிவிற்கான வைத்திய அதிகாரி, மன்னார் பிரதேசச் செயலாளர் உற்பட சுகாதார துறையினர் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
-நாளைய தினம் சனிக்கிழமை (10) பேசாலை,வங்காலை ,முத்தரிப்புத்துறை,மடு ஆகிய பகுதிகளில் குறித்த தடுப்பூசிகள் செலுத்தும் பணி இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தலைமன்னாரில் முதல் கட்டமாக பைசர் (Pfizer ) தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு.
Reviewed by Author
on
July 09, 2021
Rating:
Reviewed by Author
on
July 09, 2021
Rating:


No comments:
Post a Comment