உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தகுதி பெற்ற 5 நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம் !
இதுபற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது:
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தொற்றை இனங்காண்பதற்கான அன்டிஜன் பரிசோதனையை முன்னெடுப்பதற்கு அவசியமான உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கான நிதியுதவியொன்றை வழங்குவது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தததுடன் அதற்கான கோரிக்கைகைள் முன்வைக்கமுடியும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று மருத்துவப்பிரிவின் ஊடாக நானும் பேராசிரியர் நீலிகா மலவிகேவும் மேற்படி நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பித்திருந்தோம்.
பல்வேறு நாடுகளாலும் முன்வைக்கப்படும் கோரிக்கைகளில் போட்டித்தன்மையின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட ஐந்து நாடுகளுக்கு மாத்திரமே உலக சுகாதார ஸ்தாபனத்தினால் மேற்படி நிதியுதவி வழங்கப்படும். இந்நிலையில் குறித்த விண்ணப்பத்துடன் நாம் முன்வைத்திருந்த மாதிரி செயற்திட்டமானது அங்கீகரிக்கப்பட்டு, நிதியுதவியைப் பெறுவதற்குத் தகுதிபெறும் 5 நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.
ஸ்ரீ ஜயவர்னபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று மருத்துவப்பிரிவின் இச்செயற்திட்டத்தின் பங்காளிகளாக சுகாதாரசேவைகள் பணிப்பாளர்நாயகம் விசேட வைத்தியநிபுணர் அசேல குணவர்தனவையும் கொழும்பு மாநகரசபையையும் குறிப்பிடமுடியும்.
இந்நிலையில் ஆய்வுகூடப்பரிசோதனை நடவடிக்கைகளுக்காக 2 இலட்சம் அமெரிக்கடொலர் நிதியுதவியும் 2 இலட்சம் அன்டிஜன் பரிசோதனை உபகரணங்களும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊடாக எமது நாட்டிற்குக் கிடைக்கப்பெறும்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு பாரியதொரு நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், கொவிட் - 19 தொற்றாளர்களை விரைவாக இனங்காண்பதற்கும் பி.சி.ஆர் பரிசோதனை உபகரணங்களின் மட்டுப்பாட்டை ஈடுசெய்வதற்கும் இதனைப் பயன்படுத்தமுடியும்.
அதேபோன்று தற்போது வழங்கப்பட்டுள்ள நிதியுதவியில் ஆய்வுகூட நடவடிக்கைகளுக்கான எமது சொற்பளவான நிதியே தேவைப்படும். எஞ்சுகின்ற நிதியை மருத்துவ உபகரணங்களை விநியோகிக்கும் கட்டமைப்பிற்கு வழங்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தகுதி பெற்ற 5 நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம் !
Reviewed by Author
on
July 12, 2021
Rating:

No comments:
Post a Comment