அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பைஸர் தடுப்பூசியின் இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு.

மன்னார் மாவட்டத்தில் பைஸர் தடுப்பூசியின் இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பைஸர் தடுப்பூசியின் இரண்டாவது தடுப்பூசி இன்று புதன் கிழமை (11)பேசாலை சென்.மேரிஸ் கல்லூரி , வங்காலை புனித ஆனாள் தேவாலயம், அச்சங்குளம் தேவாலயம் , முசலி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, மடு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலும் வழங்கப்பட்டுள்ளது. 

 நாளைய தினம் வியாழக்கிழமை (12) மன்னார் நகரத்தில் சித்திவிநாயகர் இந்து கல்லூரி, மன்னார் புனித சவேரியார் பெண்கள்; கல்லூரி, நானாட்டான் டிலாசால் பாடசாலை , மடு தட்சணா மருதமடு பாடசாலை, மறிச்சுக்கட்டி அல்.யசிர் பாடசாலையிலும் இரண்டாம் கட்ட பைஸர் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. -சுகாதார துறையினருடன்,இராணுவம் மற்றும் விமானப் படையினர் இணைந்து குறித்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.






மன்னாரில் பைஸர் தடுப்பூசியின் இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு. Reviewed by Author on August 11, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.