அண்மைய செய்திகள்

recent
-

கர்ப்பிணித் தாய்மார்களிடம் கோரிக்கை!

கர்ப்பிணித் தாய்மார்களில் இதுவரை 75 சதவீதமானோர் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளதாக குடும்ப நல சுகாதார சேவை பணியகம் தெரிவித்துள்ளது. இதுவரை கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாத கர்ப்பிணித் தாய்மார்கள் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அல்லது கிளினிக் சென்று தனக்கான தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.

 நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 32 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 4,200 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது சுமார் 900 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.

கர்ப்பிணித் தாய்மார்களிடம் கோரிக்கை! Reviewed by Author on August 30, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.