மன்னாரில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் சடலங்களை எரிப்பதற்கு வழி இன்றி தவிக்கும் அவல நிலை
மன்னார் நகர சபைக்கு சொந்தமான மயானத்தில் எரிப்பதற்கான எந்த வசதியும் இல்லாத நிலையில் அதற்கான ஏற்பாடுகளை கூட மன்னார் நகர சபை இதுவரை மேற்கொள்ளவில்லை
இதன் காரணமாக மன்னாரில் இறந்தவர்களின் உடலை வாகனம் மூலம் வவுனிய எடுத்து சொல்ல வேண்டியுள்ளதுடன் வவுனியாவில் மின்சாரத்தில் தகனம் செய்வதற்கு பெரிய தொகை நிதி செலுத்த வேண்டிய நிலை காணப்படுவதாக இறந்தவர்களின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர் இந்த நிலை மேலும் தொடர்ந்தால் ஏழை மக்கள் இறந்தவர்களை வீதிகளில் எரிக்க வேண்டிய நிலை தான் ஏற்படும் என விசனம் தெரிவிக்கின்றனர்
ஏற்கனவே கொரோனா காரணமாக நிதி சுமையில் இதுக்கும் மக்கள் தற்போது இறந்தவர்களை உரிய மரியாதையுடன் அடக்கம் அல்லது தகனம் கூட செய்ய முடியாத நிலையில் உள்ளனர்
எனவே இவ்விடயம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மன்னார் மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களான சால்ஸ்நிர்மல நாதன் மற்றும் செல்வம் அடைக்கல நாதன் மன்னார் நகர சபை தலைவர் ஜெராட் ஆகியோர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் இறந்தவர்களை மன்னாரில் தகனம் செய்வதற்கான ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
மன்னாரில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் சடலங்களை எரிப்பதற்கு வழி இன்றி தவிக்கும் அவல நிலை
Reviewed by Author
on
August 31, 2021
Rating:

No comments:
Post a Comment