ரிசாத் மரண அச்சுறுத்தல் விடுத்தார் – சிறைச்சாலை வைத்தியர் முறைப்பாடு
ஆகஸ்ட் 15 ம் திகதி சிறைச்சாலையில் உள்ளவர்களிற்கு சிறைச்சாலையின் மருந்து வழங்கும் பகுதியில் மருந்துகளை வழங்கிக்கொண்டிருந்தவேளை ரிசாத்பதியுதீன் என்ற நபர் அந்த பகுதிக்குள் சட்டவிரோதமாக சீற்றத்துடன் நுழைந்தார் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.
நான் அவசியமான விபரங்களை பெற்றுக்கொண்ட பின்னர் அவரை அழைப்பதாக தெரிவித்து அவரை அங்கிருந்து செல்லுமாறு கேட்டேன் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.
ரிசாத்பதியுதீன் என்ற அந்த நபர் தனது அரசியல் செல்வாக்கு குறித்து குறிப்பிட்டு தான் நினைத்தால் அந்த இடத்திற்கு மேலும் தகுதிவாய்ந்த மருத்துவரை அழைக்கமுடியும் என குறிப்பிட்டார் எனவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அரசாங்கத்திற்குள் தனக்குள்ள அரசியல் செல்வாக்கு குறித்து தெரிவித்த பின்னர் அவர் மரண அச்சுறுத்தல் விடுத்தார் தகாத வார்த்தைகளால் திட்டடினார் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் இடம்பெற்றவேளை சிறைக்கைதியொருவம் அதிகாரியொருவரும் காணப்பட்டனர்என தெரிவித்துள்ள மருத்துவர் நடந்ததை அறிந்ததும் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினரை அங்கிருந்து அழைத்துச்சென்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
மருந்துபெறுவதற்காக வந்த சில கைதிகள் இந்த சம்பவத்தை பார்த்தனர்,நான் எனது மற்றும் குடும்பத்தின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு முறைப்பாடு செய்ய தீர்மானித்தேன் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.
ரிசாத் மரண அச்சுறுத்தல் விடுத்தார் – சிறைச்சாலை வைத்தியர் முறைப்பாடு
Reviewed by Author
on
August 23, 2021
Rating:
Reviewed by Author
on
August 23, 2021
Rating:



No comments:
Post a Comment