அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா தொற்றால் மரணித்த 91% மானோர் எவ்வித தடுப்பூசியையும் பெறாதோர்..!

எந்தவொரு கொரோனா தடுப்பூசியினையும் பெற்றுக்கொள்ளாதவர்களே இலங்கையில் அதிகளவில் கொவிட்19 தொற்றினால் மரணித்துள்ளதாக தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதன் பதில் பிரதானி விசேட வைத்தியர் சமித்த கினிகே கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு இதனைத் தெரிவித்துள்ளார். இதுவரை நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் அடிப்படையில் 91 சதவீதமானவர்கள் எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தப்படாதவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 அத்துடன், ஒரு தடுப்பூசி மாத்திரம் செலுத்தப்பட்டவர்களில் 8 சதவீதமானவர்கள் உயிரிழந்தனர். அதேநேரம், ஒரு சதவீதமானவர்களே இரண்டு தடுப்பூசிகளும் ஏற்றப்பட்ட நிலையில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தனர். எனவே, பொதுமக்கள் தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளும் பட்சத்தில் மரணங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவின் பதில் பிரதானி விசேட வைத்தியர் சமித்த கினிகே குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றால் மரணித்த 91% மானோர் எவ்வித தடுப்பூசியையும் பெறாதோர்..! Reviewed by Author on August 23, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.