அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் அஸ்ராசெனேக்கா தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு

ஜனாதிபதி கோட்டபாஜ ராஜபக்ஸ அவர்களினால் இவ்வாரம் தேசிய தடுப்பூசி வாரமாக பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் மன்னார் மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி பெறாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று செவ்வாய்கிழமை காலை தொடக்கம் இடம் பெற்று வருகின்றது மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள் இணனைந்து எருக்கலம்பிட்டி,தாராபுரம்,சாந்திபுரம் உட்பட பல பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் 

 குறிப்பாக மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டவருக்கும் அதே நேரம் கொரோனா முடக்க நிலை காரணமாக மன்னார் மாவட்டதில் தற்காலிகமாக வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுள்ளது மேலும் கடந்த மாதம் அஸ்ராசெனிக்கா தடுப்பீசியை பெற்றுக் கொண்டு கடமை நிமித்தம் இரண்டாவது தடுப்பூசிய பெறாத சுகாதார துறையை சேர்ந்தவர்களுக்கும் இன்றைய தினம் இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது






மன்னாரில் அஸ்ராசெனேக்கா தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு Reviewed by Author on August 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.