அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் அதிகரிக்கும் மக்கள் நடமாட்டம்

நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள நிலையில் மன்னார் மாவட்ட நகர் பகுதியில் மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது குறிப்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை காலை தொடக்கம் சிலர் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் அதே நேரம் பலர் அத்தியாவசிய காரணங்கள் இன்றியும் நகர் பகுதிகளை நோக்கி வருகை தந்த வண்ணம் உள்ளனர் அதே நேரம் இன்றைய தினம் வங்கி நடவடிக்கைகளும் இடம் பெறுகின்ற நிலையில் மக்களின் நடமாட்டம் தொடர்சியாக அதிகரித்து செல்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது

 பொலிஸார் மற்றும் இரானுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற போது மக்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்த முடியாத நிலையே காணப்படுகின்றது மன்னார் மாவட்டத்தில் கடந்த மாதம் கொரோனா தொற்று மற்றும் மரணங்கள் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் மக்கள் தொடர்ந்து ஊரடங்கு நிலையை மதிக்காது செயற்படுவதுடன் அனுமதி பெறாத பல வர்த்தக நிலையங்கள் மற்றும் மரக்கறி வியாபார நிலையங்கள் மக்களை அதிகளவில் ஒன்று கூட்டி விற்பனை நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர் அதே நேரம் மன்னாரில் பல இடங்களின் உரிய அனுமதி இன்றி திருமண நிகழ்வுகள் மற்றும் களியாட்ட நிகழ்வுகள் இடம் பெறுவதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது
             




மன்னாரில் அதிகரிக்கும் மக்கள் நடமாட்டம் Reviewed by Author on September 02, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.