அரிசி, சீனிக்கு இன்று முதல் கட்டுப்பாட்டு விலை
அரிசி மற்றும் சீனியின் விலையைக் கட்டுப்பாட்டுக்குள் இன்று முதல் கொண்டுவரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. களஞ்சியசாலைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 29,900 மெற்றிக் டன் சீனியை நேற்றைய தினம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது மீட்டு அரச மற்றும் தனியார் நிறுவனங்களினூடாக நுகர்வோருக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சீனித் தொகையை, கட்டுப்பாட்டு விலையில், அரச மற்றும் தனியார் வர்த்தக நிலையங்களின் ஊடாக நுகர்வோருக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் என்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
அரிசி மற்றும் சீனிக்கான உச்சபட்ச சில்லறை விலைகள் அரசாங்கத்தால் இன்று முதல் நிர்ணயிக்கப்படவுள்ளன.
அரிசி, சீனிக்கு இன்று முதல் கட்டுப்பாட்டு விலை
Reviewed by Author
on
September 02, 2021
Rating:

No comments:
Post a Comment