சம்பந்தனின் கடிதத்தில் உடன்பாடில்லை- சிறிதரன்
காரணம் ஒரு தரப்பு களத்தில் இல்லை. மற்றைய தரப்பான அரசு இந்த நாட்டினுடைய இறைமையுள்ள அரசை நடத்துகின்ற ஒரு அரசாங்கம் தன் குடிமக்கள் மீது போர் குற்றத்தை நடத்தியுள்ளது. குண்டுகளை வீசி மக்களை படுகொலை செய்திருக்கிறது. பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் மக்களை அழைத்து அதற்குள் குண்டு போட்டுக்கொலை செய்துள்ளது. ஒரு இன அழிப்பு.
அது பற்றி கடந்த திங்கட்கிழமை ஆராயலாம் என தீர்மானித்த நிலையில், கட்சியின் உயர்மட்டகுழுவின் இணைய வழி கலந்துரையாடல் கடந்த திங்கள்கிழமை நடந்தது.
இதைபற்றி ஆராய்ந்த போது, “ஐயா ஒரு தனி ஆளாக கையொப்பமிட்டு அனுப்பி விட்டார்“ என்றார் சுமந்திரன். கடிதம் அனுப்பி விட்ட பின்னர் நாம் ஒன்றும் செய்ய முடியாது.
அவர் அதனை அனுப்பியிருந்தால் நாங்கள் எதனையும் செய்ய முடியாது.
காரணம் அவர் சிங்கக் கொடியை பிடித்து விட்டு காளியின் கொடி என்று சொல்லுவார். அவர் பாராளுமன்றத்தில் புலிகள் ஜனநாயகத்தை மதிக்கவில்லை, மனித உரிமை மீறல்களை மதிக்கவில்லை அதனால் அவர்கள் அழிந்தார்கள் என்று பேசுவார். அதையும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு உள்ளது.
அவர் கடிதத்தை அனுப்பி விட்டு, இரண்டு பேரையும்தான் விசாரிக்க வேண்டுமென்றால், மக்கள் ஏற்றுக்கொண்டு பேசாமல் இருப்பார்கள். இதுதான் இன்றைய காலசூழல்.
அவர் எங்களை கேட்கவில்லை. அவரது கடிதத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் கூட்டமைப்பின் தலைவர் என அவர் அனுப்பியதை யாரும் கேள்விகேட்க முடியாது. அந்த சூம் சந்திப்பில், கடிதம் அனுப்பப்பட்டு விட்டதாகவே சுமந்திரன் தெரிவித்தார். அதற்கு பின்னர் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. அதில் எமது கருத்து பெறவில்லை.
நான், சாள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன், மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மட்டக்களப்பு மேயர் உள்ளிட்டவர்கள் ஒரு கடிதத்தை தயாரித்திருந்தோம். ஆனால் அந்த கடிதம் அனுப்பப்படவில்லை. அதற்குரிய இணைப்பை நான் தான் செய்தேன்.
இதில் ஒரு சில காரணங்களை கருதி, முரண்பாடுகள் அதிகரிக்கக்கூடாது என்பதற்காகவும் இதைப்பற்றி அதிகம் பேசவில்லை. கடந்த 7ஆம் திகதியே இந்த முயற்சியை கைவிட்டு விட்டோம்.
அதில் முக்கியமான விடயம், பல கடிதங்கள் இங்கிருந்து அனுப்பப்பட காரணம், எமது கட்சிக்குள் இது பற்றி எப்போதோ கலந்துரையாடப்பட்டிருக்க வேண்டும். கடந்த மே மாதம் 17ஆம் திகதி 14 விடயங்களை குறிப்பிட்டு கடிதம் எழுதியிருந்தேன்.
இதில் 2வது விடயமாக ஜெனீவா விடயத்தையே எழுதியிருந்தேன். அதை பார்த்து விட்டு சம்பந்தன் ஐயா பார்த்து விட்டு தொலைபேசியில் பேசினார். விரைவில் பேசுவோம் என்றார். மாவை சேனாதிராசாவும் பேசினார். ஆனால், அதை பற்றி பேசப்படவில்லை.
நான், சாள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன் ஆகிய கூவரும் கடந்த ஜெனவரியில் தனியாக ஒரு கடிதம் அனுப்பியிருந்தோம் என்பதை சிறிதரன் இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.
சம்பந்தனின் கடிதத்தில் உடன்பாடில்லை- சிறிதரன்
Reviewed by Author
on
September 10, 2021
Rating:

No comments:
Post a Comment