பூம்புகார் கொலை கூட்டுக்கொலை என சந்தேகம்! ஒருவர் கைது!
உயிரிழந்தவரின் மனைவியுடன் அவருக்கு இருந்த தொடர்பு குறித்து எழுந்த பிரச்சினைதான் குடும்பத்தலைவரை கொலை செய்யும் முடிவுக்கு கொண்டு சென்றுள்ளது என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இருவரும் இணைந்தே குடும்பத்தலைவரை கொலை செய்துள்ளனர் என்றும் ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.
அதேவேளை முன்னதாக கொல்லப்பட்டவரின் மனைவி பொலிஸாருக்கு தெரிவித்ததாவது,
“கணவன் தினமும் போதையில் வந்து தன்னுடன் தர்க்கப்பட்டு, தன்னை தாக்குவதாகவும் நேற்றைய தினமும் வழமை போன்று இரவு போதையில் வந்து தர்க்கப்பட்டு தன்னை தாக்கிய போது, தான் ஆத்திரத்தில கையில் அகப்பட்ட திருகுவளையால் திருப்பி தாக்கிய போது , அவர் உயிரிழந்துவிட்டார்” என தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொல்லப்பட்டவரின் மனைவியான 28 வயதுடைய பெண்ணையும், அவருடன் தொடர்பை வைத்திருந்த 28 வயதுடைய ஆணையும், யாழ்ப்பாணம் குற்றப் பிரிவு பொலிஸார் தடுத்து வைத்து தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பூம்புகார் கொலை கூட்டுக்கொலை என சந்தேகம்! ஒருவர் கைது!
Reviewed by Author
on
September 19, 2021
Rating:

No comments:
Post a Comment