சட்டவிரோதமாக மருந்து வில்லைகளை விற்பனை செய்த வைத்தியர் கைது
மருத்துவ சட்டங்களை மீறி மருந்து வில்லைகளை விநியோகித்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாணந்துறை – பல்லியமுல்ல பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் வசமிருந்த 20,000 இற்கும் அதிகமான சட்டவிரோத மருந்து வில்லைகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. பாணந்துறை – கொரக்கபொல பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, மருந்து வில்லைகளை கொள்வனவு செய்ய வருகை தந்திருந்த 15 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் பாணந்துறை வடக்கு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக மருந்து வில்லைகளை விற்பனை செய்த வைத்தியர் கைது
Reviewed by Author
on
October 31, 2021
Rating:

No comments:
Post a Comment