அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து தொழில் வழிகாட்டல் வார பேச்சுப் போட்டியில் மூன்று மாணவிகள் தேசிய மட்டத்திற்கு தெரிவு!

மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் பிரதான செயற்பாடான தொழில் வழிகாட்டல் தொடர்பான எண்ணக் கருவினை மக்களிடையே கொண்டு செல்வதற்காக நடப்பாண்டிலிருந்து "தொழில் வழிகாட்டல் வாரத்தை" ஒக்டோபர் 04ம் திகதி தொடக்கம் 10ம் திகதிவரை நடாத்துவதற்கு மனிதவலு வேலை வாய்ப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் குறித்த தொழில் வழிகாட்டல் வாரத்தினை முன்னிட்டு இடைநிலை(தரம் 09,10,11) பாடசாலை மாணவர்களிடையே நிகழ்நிலை(Online) முறையியூடாக நாடாத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகள் முதலிடத்தைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

 ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தேவரஞ்சன் கோகுலறூபி, முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க தழிழ்க் கலவன் பாடசாலை மாணவியான எம்.அபிசாயினி, குமுழமுனை மகாவித்தியாலய மாணவியான எஸ்.பவித்ரா ஆகிய மாணவிகளே இவ்வாறு தேசிய மட்ட போட்டிக்கு தகுதி பெற்றவர்களாவார். இவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் மென்மேலும் வெற்றிகளைப் பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். 

தகவல் : முல்லைத்தீவு மாவட்ட செயலக மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களம்.



முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து தொழில் வழிகாட்டல் வார பேச்சுப் போட்டியில் மூன்று மாணவிகள் தேசிய மட்டத்திற்கு தெரிவு! Reviewed by Author on October 02, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.