அண்மைய செய்திகள்

recent
-

மது போதை: மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் விழுந்து கடற்படை வீரர் பலி; மற்றொருவர் காயம்

இன்று (21) காலை தெனியாய ஆதார வைத்திய சாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொருவர் காயமடைந்து தெனியாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 உயிரிழந்தவர் மாகொல கடற்படை முகாமில் கடமையாற்றும் 36 வயதுடைய கொட்டபொல, கட்டபருவகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் மதுபோதையில் இருந்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. தெனியாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மது போதை: மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் விழுந்து கடற்படை வீரர் பலி; மற்றொருவர் காயம் Reviewed by Author on November 21, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.