அண்மைய செய்திகள்

recent
-

ஆங்கிலக் கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்து; 31 பேர் பலி

ஆங்கில கால்வாயில் குடியேற்றவாசிகளின் படகு மூழ்கியதில் பலர் உயிரிழந்துள்ளனர். ஆங்கில கால்வாயை கடக்க முயன்றவேளை ஏற்பட்ட விபத்து காரணமாக இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. பிரிட்டனிற்குள் நுழையும் நோக்கத்துடன் படகில் பயணித்துக்கொண்டிருந்த குடியேற்றவாசிகள் கலைஸ் பகுதியில் உயிரிழந்துள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸாரை மேற்கோள்காட்டி ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது. 

மீனவர்கள் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து தங்களிற்கு இந்த விடயம் தெரியவந்ததாக தெரிவித்துள்ள கரையோர காவல்படையினர் மீட்பு பணிகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர். 24உடல்களை மீட்டுள்ளோம் 20 பேரை உயிருடன் மீட்டுள்ளோம் என டெட்டெஹெம் மேயர் பிராங்டெர்சின் தெரிவித்துள்ளார். இது பெரும் துர்நிகழ்வு என தெரிவித்துள்ள பிரான்ஸ் பிரதமர் குற்றவாளிகளான ஆட்கடத்தல்காரர்களின் நடவடிக்கைக்கு மக்கள் பலியாகியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். பிரான்சின் உள்துறை அமைச்சர் கலைஸ் பகுதிக்கு செல்வதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.



ஆங்கிலக் கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்து; 31 பேர் பலி Reviewed by Author on November 25, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.