அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் வெற்றி.


மன்னார் நகர சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான 2022-ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக வெற்றி பெற்றுள்ளது. கடந்த ( 23) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் நகர சபையின் 2022 ம் ஆண்டு பாதீடுக்கான சபை அமர்வு மன்னார் நகர சபை தலைவர் ஞா.அன்ரணி டேவிட்சன் தலைமையில் இடம் பெற்றுள்ளது. இதன் போது நகர சபையின் உப தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் செயலாளர் அனைவரின் ஒத்துழைப்போடு 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வெற்றி அடைந்துள்ளது. 

 மன்னார் நகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளதுடன் அனைவரும் ஒற்றுமையாக மன்னார் மாவட்டத்தை நல்ல அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் மன்னார் நகரசபை தலைவர் ஞா.அனரணி டேவிட்சன் தெரிவித்தார்.


மன்னார் நகர சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் வெற்றி. Reviewed by Author on November 25, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.