வடக்கில் திங்கள் முதல் பூஸ்டர் டோஸ் வழங்கல் ஆரம்பம் - மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்
இது தொடர்பில் அவர் விடுத்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்தவை வருமாறு,
இரண்டாவது தடுப்பூசியைப் பெற்று ஆகக்குறைந்தது மூன்று மாத இடைவெளியின் பின்னர் இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம்.
இரண்டு தடவைகள் கொவிட்-19 தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களில் தொற்றுக்கு உள்ளானவர்கள் அவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட நாளிலி
ருந்து 6 மாத கால இடைவெளியின் பின்னர் இத்தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம்.
சினோபார்ம் அல்லது ஏதாவது ஒரு கொவிட்-19 தடுப்பூசியை இரண்டு தடவைகள் பெற்றுக்கொண்டவர்கள் மட்டுமே தமது தடுப்பூசி அட்டையைச் சமர்ப்பித்து தமக்குரிய மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்தத் தடுப்பூசிகள் வழங்கப்படும் நிலையங்கள் தொடர்பாக அந்தந்த பிரதேசங்களுக்குரிய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை மூலம் மக்களுக்கு
அறிவிக்கப்படும்.
தடுப்பூசி பெறத் தகுதியுடையவர்கள் அந்தந்த பிரதேசங்களிற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைகளில் அல்லது அவர்களால் அறிவிக்கப்படும்
நிலையங்களில் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதலும் மற்றும் தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி முதல் பிரதி சனிக்கிழமை தோறும் தடுப்பூசி வழங்குவதற்கு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை, ஊர்காவற்றுறை, தெல்லிப்பழை, சாவகச்சேரி ஆதார
வைத்தியசாலைகளிலும், கிளிநொச்சி,முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்டபொது வைத்தியசாலைகளி லும் இந்தத்
தடுப்பூசிகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
30 வயதுக்கு மேற்பட்டவர்களில் அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக
சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் தடுப்பூசி வழங்கும் நிலையத்திலுள்ள மருத்துவ அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய மூன்றாவது தடுப்பூசியை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் தடுப்பூசி வழங்கும் நிலையத்திலுள்ள மருத்துவ அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய மூன்றாவது தடுப்பூசியை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் திங்கள் முதல் பூஸ்டர் டோஸ் வழங்கல் ஆரம்பம் - மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்
Reviewed by Author
on
December 11, 2021
Rating:
No comments:
Post a Comment