கெடுபிடிகளுக்கு மத்தியில் கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.
இடித்தழிக்கப்பட்ட தூபியினை ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோ.கருணாகரம்(ஜனா) அவர்கள் தனது சொந்த நிதியில் மீளவும் புனரமைப்பு செய்து இருந்த நிலையில் கடந்த சில வருடங்களாக பலர் வருடா வருடம் மீண்டும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.
இந்த நிலையில் இப்போதைய அரசு இறந்த உறவுகளை அஞ்சலிங்கும் உரிமையையும் மக்களின் உணர்வுகளையும் மறுத்து பல முட்டுக்கட்டைகளை போட்டு இடையூறுகள் விளைவித்து வரும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (28) பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களின் கெடுபிடிகள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ரெலோவின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம்(ஜனா) தலைமையில் ரெலோவின் உப தலைவர் நி.இந்திரகுமார்(பிரசன்னா) ரெலோவின் நிதிச் செயலாளர் ந.விந்தன் கனகரட்ணம் ஆகியோர் மரணித்த மக்களை நினைவு கூர்ந்து தூபியில் சுடர் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கெடுபிடிகளுக்கு மத்தியில் கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.
Reviewed by Author
on
January 28, 2022
Rating:
No comments:
Post a Comment