அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்காவில் ஈழத்தமிழ் பெண் மீது துப்பாக்கிச்சூடு.

அமெரிக்காவில் குடும்பத்துடன் காரில் பயணம் செய்துகொண்டிருந்த ராஜி பட்டர்சன்(Raji Pattison) என்ற ஈழத்தமிழ் பெண் மீது சற்று முன்னர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பெண்மணி இலங்கை ஒற்றையாட்சி அரசால் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவழிப்பிற்கு நீதி வேண்டி ஐ.நா மனித உரிமைகள் பேரவை. உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் நீதிக்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் நிலையில் இவர் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

Top 20 women of Excellence என்ற விருதைப் பெறுவதற்காக சிக்காகோ நகருக்கு குடும்பத்துடன் பயணம் செய்துகொண்டிருந்தபோதே இந்தத் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சிறிய காயத்துடன் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார் . இந்த தாக்குல் தொடர்பில் அமெரிக்க பொலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் ஈழத்தமிழ் பெண் மீது துப்பாக்கிச்சூடு. Reviewed by Author on March 16, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.