அண்மைய செய்திகள்

  
-

மன்னாரில் நெல் காயப்போடும் தளங்கள் இல்லாததால் வீதிகளைப் பயன்படுத்தும் அவல நிலையில் விவசாயிகள்.

மன்னார் மாவட்டத்தில் பாரிய சிரமங்களுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய செய்கையினை தொடர்ந்து அறுவடை செய்கின்ற நெல்லை காய போடுவதற்கான தளங்கள் இல்லாததால் விவசாயிகள் பிரதான வீதிகளை பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் மற்றும் முசலிப் பிரதேசங்களில் இந்த நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. விவசாயம் செய்யும் வயல் நிலங்களுக்கு அருகில் பொதுவான தளங்கள் அமைத்துக் கொடுத்தால் பல விவசாயிகள் பலன் பெறுவார்கள்.நெல் அறுவடை முடிந்தவுடன் உழவு இயந்திரங்களில் நெல்களை ஏற்றிக் கொண்டு பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிரதான தார் வீதிகளுக்கு வரவேண்டியுள்ளது.

 இதனால் செலவுகள் பல மடங்கு அதிகரிக்கிறது. அதில் உழவு இயந்திர வசதி இல்லாதவர்கள் நிலை பரிதாபத்துக்குரியது.பல நூறு ஏக்கர் வயல் நிலங்களை உள்ளடக்கி பொதுவான தளங்களை அமைத்துக் கொடுப்பது விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் மிகவும் பயன்பெரும். நானாட்டான் பிரதேசத்தில் உமநகரி கீழ்ப் பகுதியில் சிறுவெளி பிரதேசங்களிலும் மேட்டு நிலங்கள் காணப்படுகிறது. அவ்வாறான மேட்டு நிலங்களை அடையாளம் கண்டு நெல் காயப்போடும் தளங்களை அமைப்பதற்கு விவசாய அடைப்புக்கள் முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். மேலும் இவ்வாறு வீதிகளில் நெல் காயப் போடுவதால் போக்குவரத்திற்கு இடையூறுகள் ஏற்படுவதோடு விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளதாக மன்னார் மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.







மன்னாரில் நெல் காயப்போடும் தளங்கள் இல்லாததால் வீதிகளைப் பயன்படுத்தும் அவல நிலையில் விவசாயிகள். Reviewed by Author on March 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.