அண்மைய செய்திகள்

recent
-

முன்னணி மதுபான நிறுவன போத்தலில் தண்ணீர் கலந்து மோசடி

 முன்னணி மதுபான நிறுவனத்தால் விநியோகிக்கப்படும் மதுபான போத்தல்களில் தண்ணீரை கலந்து விற்பனை செய்த மோசடியை சட்டத்தின் முன்நிறுத்த மதுவரி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 


இந்த மோசடியாளர்கள் மதுபான போத்தல்களின் மூடிகளை மிக சூட்சுமமாக அகற்றி, அவற்றில் தண்ணீரை கலந்து, மூடிகளை மீண்டும் இணைத்து விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது. 

மதுவரி அதிகாரிகள் இதுபோன்ற 33 மதுபான போத்தல்களை கையகப்படுத்தியுள்ளனர். 

இந்நிலையில் மதுவரி ஆணையர் நாயகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, அந்த மதுபானசாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.




முன்னணி மதுபான நிறுவன போத்தலில் தண்ணீர் கலந்து மோசடி Reviewed by Vijithan on August 10, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.