உக்ரைனில் 300 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் புதைப்பு;
இந்த சூழலில், புச்சா நகரில், 280 பேரின் உடல்களை பெரிய குழிகளில் ஒரே இடத்தில் போட்டு புதைத்து உள்ளோம் என்று மேயர் அனடோலி பெடோருக் கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறும்போது, புச்சா நகரில் ஒரு தெருவில் நேற்று 20 ஆண்களின் உடல்கள் கிடந்தன. அவர்கள் அனைவரும் தலையின் பின்புறத்தில் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். பலியானவர்களில் ஆண்களும், பெண்களும் இருந்தனர். அவர்களில் 14 வயது சிறுவனும் இருந்துள்ளான் என்று பெடோருக் கூறினார்.
கொல்லப்பட்டவர்களில் சிலர் புச்சாங்கா ஆற்றை கடந்து உக்ரேனிய கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்ல முயன்றபோது கொல்லப்பட்டு உள்ளனர் என்று அவர் கூறினார். ரஷிய ஆக்கிரமிப்பின் விளைவுகளால் ஏற்பட்டவை இவை என்று அவர் வேதனையுடன் கூறினார்.
ரஷ்ய படைகளுக்கு எதிரன போரில் பொதுமக்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்று கூற முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அந்த உடல்கள் இன்னும் தெருவிலேயே கிடக்கின்றன. வீரர்கள் அனுமதி கிடைத்ததும், 3 அல்லது 4 நாட்களில் உடல்களை அதிகாரிகள் அப்புறப்படுத்துவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
உக்ரைனில் 300 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் புதைப்பு;
Reviewed by Author
on
April 03, 2022
Rating:

No comments:
Post a Comment