மன்னாரில் சகல துறையினருக்கும் எரிபொருள் விநியோகம் குறித்து அரச அதிபர் தலைமையில் கலந்துரையாடல்.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மின் தடங்கள் அமுலாக்க பட்டுள்ள நிலையில் மாவட்டத்திற்கு தேவையான எரிபொருட்களை சீரான வகையில் சகல தரப்பினருக்கும் உரிய முறையில் வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முகாமையாளர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு நன்றிகளை தெரிவித்தார்.
-மேலும் மாவட்டத்தில் உள்ள உள்ள மீனவர்களுக்கு கடல் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள மீன்பிடி படகு மற்றும் டோலர் படகுகளுக்கு தேவையாக மண்ணெண்ணெய் மற்றும் டீசல் ஆகிய எரி பொருட்களை உரிய முறையில் பகிர்ந்தளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதற்கு அமைவாக மாவட்டத்தில் உள்ள மீனவ அமைப்புகள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஊடாக மீன்பிடி நடவடிக்கைகளுக்காக தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
-மேலும் மாவட்டத்தில் உள்ள வெதுப்பகங்களுக்கும் உரிய முறையில் எரி பொருளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை மாவட்டத்தில் திடீரென மின் தடங்கள் ஏற்படுகின்ற போது உடனடியாக அவசர தேவைகளுக்கு எரிபொருளை வழங்கவும்,குறிப்பாக மாவட்ட வைத்தியசாலைக்கு தேவையான எரி பொருளை சிரமங்கள் இன்றி பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பயணிகள் சேவையில் ஈடுபட்டு வரும் அரச தனியார் பேருந்துகளுக்கு உரிய வகையில் எரிபொருளை பெற்றுக் கொடுக்கவும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
எனினும் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு எவ்வித அசௌகரியங்களும் இன்றி உரிய முறையில் எரிபொருளை வழங்க அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்-என அவர் கோரிக்கை விடுத்தார்.
மன்னாரில் சகல துறையினருக்கும் எரிபொருள் விநியோகம் குறித்து அரச அதிபர் தலைமையில் கலந்துரையாடல்.
Reviewed by Author
on
April 04, 2022
Rating:

No comments:
Post a Comment