பெற்றோலியக் கூட்டுத்தாபன கிளையினை முற்றுகையிட பொதுமக்கள் முயற்சித்தமையால் மட்டக்களப்பில் பதற்றம்
இன்றைய தினம் மட்டக்களப்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருட்கள் வழங்கப்படாது என்று வெளியான அநாமதேய தகவல்களையடுத்து பெருமளவானோர் இன்று மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினை முற்றுகையிட முற்பட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த பொலிஸார் நிலைமையினை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துடன் அங்கிருந்தவர்களை கலைந்துசெல்லுமாறு அறிவுறுத்தல்களை வழங்கினர்.
பெற்றோலியக் கூட்டுத்தாபன கிளையினை முற்றுகையிட பொதுமக்கள் முயற்சித்தமையால் மட்டக்களப்பில் பதற்றம்
Reviewed by Author
on
April 15, 2022
Rating:

No comments:
Post a Comment