ஆர்ப்பாட்டங்களை வன்முறை கொண்டு ஒடுக்குவதை நாம் விரும்பவில்லை-வைத்தியர் க.வாசுதேவா!
இதன்போது முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் க.வாசுதேவா மற்றும் செயலாளர் சத்துர ஜெயசேகர ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.இங்கு கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் க.வாசுதேவா கருத்து தெரிவிக்கையில்
தற்போது இலங்கை நாட்டில் உள்ள பணவீக்கம் அன்னிய செலவாணி நெருக்கீடு எரிசக்தி நெருக்கீடு போன்ற பிரச்சினைகளால் நாட்டில் சகல துறைகளும் நெருக்கடியினை சந்தித்துள்ளன. சுகாதாரத்துறை, வங்கித்துறை,எரிபொருள் விநியோகம்,தனியார் வியாபார நிலையங்கள் என்பன நெருக்கடிகளை சந்திதுள்ள நிலையில் சுகாதார துறையினர் ஆகிய நாமும் மிகுந்த நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளோம்
இதனால் இந்த சுகாதார துறையினை பயன்படுத்தும் பொதுமக்களும் மிகுந்த நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளார்கள்.
இவ்வாறு நெருக்கடிகளை எதிர்நோக்கிய நிலையில் பொதுமக்கள் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மூலம் இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு காண விளைகின்றனர்
அமைதியாக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களை வன்முறை கொண்டு ஒடுக்குவதும் அல்லது அவசரகால நிலை சட்டங்கள் மூலம் தடுக்கப்படுவதை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஆகிய நாம் விரும்பவில்லை
எனவே மக்கள் இது தொடர்பில் விளிப்படைந்து நாட்டில் சுகாதார நிலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை பரிபூரணமாக உணர்ந்து கொள்ளவேண்டும் என்ற ரீதியில் நாம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளோம்.
நாடு முழுதும் சுகாதார துறையில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டமும் அதற்கு விதிவிலக்கல்ல எமது மாவட்ட வைத்திய சாலையில் பல நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளோம்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மருந்துகளுக்கு தட்டுப்பாடும். குறைந்த அளவிலேயே இருப்பிலும் உள்ளன அவற்றினை பல்வேறு வழிகளில் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றோம்.
இந்த நிலையில் கடந்த காலங்களில் ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாக்கப்பட்ட அரசியல்வாதிகள் பலரும் தொடர்ந்து இந்த அரசாங்கத்தில் இருக்கின்றார்கள் அவர்கள் மீது எந்த சட்டநடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது காலம் கடத்தப்படுகின்றது எதிர்வரும் காலங்களில் இவ்வாறான ஊழல் மிக்க அரசியல் வாதிகள் தொடர்ந்தும் பதவியில் இருக்காவண்ணம் ஆர்ப்பாட்டங்கள் மூலம் நடத்தப்படுகின்ற வேண்டுகோள் மூலம் அரசினை கேட்டுக்கொள்கின்றோம்
இவ்வாறு உழலில் ஈடுபடுபவர்கள் நிச்சயம் ஒருகாலத்தில் தண்டிக்கபடவேண்டும் பொறுப்புக்கூறும் பொறிமுறை உருவாக்கப்படவேண்டும் இவற்றை வலியுறுத்தி பொதுமக்களுக்கான விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றோம்
நாட்டின் நிதி முகாமைத்துவத்தில் ஏற்பட்டுள்ள பெரு நெருக்கடியால் ஏற்பட்ட சீர்கேட்டினை பேரிடரினை தீர்க்கும் முகமாக எல்லோரும் ஒன்றிணைந்து வருமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் கேட்டு நிக்கின்றார்கள் என தெரிவித்தனர்
ஆர்ப்பாட்டங்களை வன்முறை கொண்டு ஒடுக்குவதை நாம் விரும்பவில்லை-வைத்தியர் க.வாசுதேவா!
Reviewed by Author
on
May 08, 2022
Rating:

No comments:
Post a Comment