அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கு உரம் வழங்க இந்தியா இணக்கம் – ஜனாதிபதி


சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை விரைவில் பெற்றுத்தருவதற்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இணங்கியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(01) மாலை நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். அதற்கமைய, இந்திய கடனுதவியின் கீழ் கிடைக்கவுள்ள உரத் தொகையை 20 நாட்களுக்குள் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசன துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் இந்த கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டுள்ளது. 

 இந்த கலந்துரையாடலின் போது, உமா ஓயா மற்றும் மொரகஹகந்த செயற்றிட்டங்களை இவ்வருடம் நிறைவு செய்வதனூடாக பெரும்போகத்தில் சிறந்த பயன்களை பெற்றுக்கொள்ள முடியும் என ​தெரிவிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. வௌிநாட்டு நிதியினூடாக முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்றிட்டங்களை உரிய காலப்பகுதிக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 
இலங்கைக்கு உரம் வழங்க இந்தியா இணக்கம் – ஜனாதிபதி Reviewed by Author on June 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.