மன்னார் ஐ ஓ.சி.எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை எரிபொருள் வழங்கும் நேரத்தில் மாற்றம்
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்களுக்கு எரிபொருள் அட்டையூடாக வழங்கப்பட்டு வரும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இன்றைய தினம் (18) வழங்கப்பட உள்ள கிராமத்திற்கான நேரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எமில் நகர் கிராம அலுவலர் பிரிவு மக்களுக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை(18) காலை முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-அதற்கு அமைவாக இன்று திங்கட்கிழமை (18) காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையும் எரிபொருள் வழங்க நடவடிக்கை ஏற்பட்டுள்ளது.
-இன்றைய தினம் (18) அமுல் படுத்தப்படும் மின் தடை அறிவிற்புக்கு அமைவாகவும்,மன்னார் ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் உள்ள எரிபொருள் விநியோக இயந்திரத்தில் அடிக்கடி ஏற்படுகின்ற தடங்களை கருத்தில் கொண்டும் குறித்த நேரங்களில் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே குறித்த கிராம மக்கள் ஒதுக்கப்பட்ட நேரங்களில் வருகை தந்து இடையூறுகள் இன்றி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.என மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் மேலும் தெரிவித்தார்.
மன்னார் ஐ ஓ.சி.எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை எரிபொருள் வழங்கும் நேரத்தில் மாற்றம்
Reviewed by NEWMANNAR
on
July 18, 2022
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 18, 2022
Rating:



No comments:
Post a Comment