கடவுச்சீட்டை பெற கொழும்புக்கு வர வேண்டாம்:அமைச்சர் தம்மிக்க பெரேரா
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தம்மிக்க பெரேரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அவசரமாக வெளிநாடுக்கு வேலைக்கு செல்ல வேண்டிய தேவை இருப்பவர்கள் அதற்கான ஆவணங்கள் இருந்தால், உடனடியாக புதிய கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான தனியான கருமப்பீடத்தை பத்தரமுல்லையில் ஏற்படுத்தியுள்ளோம்.
நீண்ட வரிசைகள் காணப்பட்டாலும் அவர்கள் இலகுவாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தம்மிக்க பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா, கண்டி மற்றும் மாத்தறை அலுவலகங்களில் ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை திங்கள் கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதால், எவரும் அந்த பிரதேசங்களில் இருந்து கொழும்புக்கு வர வேண்டாம் எனவும் தம்மிக்க பெரேரா கேட்டுக்கொண்டுள்ளார்.
கடவுச்சீட்டை பெற கொழும்புக்கு வர வேண்டாம்:அமைச்சர் தம்மிக்க பெரேரா
Reviewed by Author
on
July 02, 2022
Rating:
Reviewed by Author
on
July 02, 2022
Rating:


No comments:
Post a Comment