ரயிலில் மோதி கார் விபத்து – சிகிச்சைப் பலனின்றி கர்ப்பிணி பெண்ணும் குழந்தையும் உயிரிழப்பு!
இந்த விபத்தில் காரில் பயணித்த கர்ப்பிணி பெண் மற்றும் இரண்டு சிறு பிள்ளைகள் உட்பட 6 பேர் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பியபோதே கார் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
எச்சரிக்கை சமிக்ஞைகள் வழங்கப்பட்ட போதிலும் கார் ரயில் கடவைக்குள் நுழைந்ததாக விபத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ரயிலில் மோதி கார் விபத்து – சிகிச்சைப் பலனின்றி கர்ப்பிணி பெண்ணும் குழந்தையும் உயிரிழப்பு!
Reviewed by Author
on
July 18, 2022
Rating:

No comments:
Post a Comment