யாழ்ப்பாணம் -அம்பாறை பஸ்ஸில் நடத்துனரை தள்ளிவிட்டு ரூ.59 ஆயிரம் பணம் கொள்ளை
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதிக்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், யாழ்ப்பாணத்திலிருந்து ரிக்கெட் பெற்று வந்த கொள்ளையர்கள் மூவரும் பஸ் நின்றதும் நடத்துனரை தரையில் தள்ளிவிட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பஸ் நிறுத்தப்பட்டதும் பஸ்ஸிலிருந்து இறங்கிய பயணிகள் மூன்று இளைஞர்களும் பக்கவாட்டு வீதியில் ஓடியதாகவும், அவர்களைக் கண்டால் அடையாளம் காண முடியும் என்றும் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் -அம்பாறை பஸ்ஸில் நடத்துனரை தள்ளிவிட்டு ரூ.59 ஆயிரம் பணம் கொள்ளை
Reviewed by Author
on
July 05, 2022
Rating:

No comments:
Post a Comment