அண்மைய செய்திகள்

recent
-

எரிபொருள் விலை குறித்து அதிரடி அறிவிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) மற்றும் லங்கா ஐஓசி ஆகியவை எரிபொருள் விலையை இன்று இரவு 10 மணிமுதல் குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளன. பெற்றோல் மற்றும் டீசல் விலையை 20 ரூபாயாலும் 95 ஒக்டேன் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 சிபெட்கோ புதிய விலைகள்

 பெற்றோல் 92 ஒக்டேன் - ரூ. 450/- 
 பெற்றோல் 95 ஒக்டேன் - ரூ. 540/- 
 டீசல் - ரூ. 440/- 
 சுப்பர் டீசல் - ரூ. 510/- 

 புதிய எரிபொருள் பாஸ் முறையின்படி ஜூலை 21 முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என்று கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. http://fuelpass.gov.lk/  என்ற இணையத்தில் தங்களுடைய விவரங்களைப் பதிவு செய்யுமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. 

 ஐஓசியும் விலையை குறைத்தது லங்கா ஐஓசி நிறுவனமும் இன்று இரவு 10 மணி முதல் எரிபொருள் விலைகளை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 

 புதிய விலைகள் 

 பெற்றோல் ஒக்டேன் 92 - ரூ 450 
 பெற்றோல் ஒக்டேன் 95 - ரூ 540 
 ஓட்டோ டீசல் - ரூ 440 
 சுப்பர் டீசல் - ரூ 510


எரிபொருள் விலை குறித்து அதிரடி அறிவிப்பு Reviewed by Author on July 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.