அண்மைய செய்திகள்

recent
-

இரண்டு கைகளும் ஒரு காலும் இல்லை; உயர்தரப் பரீட்சையில் 3A சித்திபெற்ற மாணவி.!

இலங்கையில் எஹேலியகொட பிரதேசத்தில் கைகள் மற்றும் ஒரு காலின்றி பிறந்து, தன் இடது காலை மட்டும் எழுதுவதற்காக பயன்படுத்திய மாணவி, ஒருவர் உயர்தர பரீட்சையில் சிறந்த சித்தியை பெற்றுள்ளார். எஹேலியகொட தேசிய பாடசாலையில் கல்வி கற்ற ரஷ்மி நிமேஷா குணவர்தன என்ற மாணவி உயர்தர வர்த்தக பிரிவில் 3 A சித்திகளை பெற்றுள்ளார். 2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் திகதி பிறந்த ரஷ்மி, தெல்ஒழுவ பாடசாலையில் ஆரம்ப கல்வியை தொடர்ந்தார். 2012ஆம் ஆண்டு 5ஆம் வகுப்பு புலமை பரீசில் பரீட்சையில் சித்தியடைந்த பின்னர் எஹேலியகொட தேசிய பாடசாலையில் மேலதிக கற்கை நடவடிக்கைகளை தொடர்ந்தார். 

 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற சாதாரண தர பரீட்சையில் 8 A சித்திகளையும் ஒரு B சித்தியும் பெற்றுள்ளார். தற்போது உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் 3 A சித்திகளை பெற்றுள்ளார். அத்துடன் 2017ஆம் ஆண்டு வியட்நாமில் இடம்பெற்ற Global IT challenge 2017 Super challenger சர்வதேச போட்டியில் தங்க பதக்கம் பெற்றுள்ளார். வாழ்க்கையில் வெற்றி பெற குறைகள் தடையில்லை என ரஷ்மி நிரூபித்து காட்டியுள்ளார் என பலரும் அவரை பாராட்டியுள்ளனர்.




இரண்டு கைகளும் ஒரு காலும் இல்லை; உயர்தரப் பரீட்சையில் 3A சித்திபெற்ற மாணவி.! Reviewed by Author on August 29, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.