சூரிய குளியல் போட்ட பெண்ணுக்கு, பிளாஸ்டிக் போல் சுருங்கிய நெற்றி..!
மிகுந்த வலியும் இருந்தும் உடனடியாக மருத்துவ முதலுதவிக்கு செல்லாத அவர், தனது குடும்பத்தினரிடம் நடந்ததை கூறியுள்ளார். இது நிலைமையை அதைவிட மேலும் மோசமாக்கி உள்ளது.
சிரின் கூறுகையில்,” அடுத்த நாள் மிகவும் வலி எடுத்தது. ஆனால் அது உரிய தொடங்கியபோது எனக்கு கொஞ்சம் நிவாரணம் கிடைத்தது. அப்போது வலி இல்லை என்பதை நன்றாக உணர்ந்தேன். வித்தியாசமாக தோல் இப்போது நன்றாக இருக்கிறது. கிட்டத்தட்ட புதுப்பிக்கப்பட்டதை போல முன்பை விட நன்றாக உணர்கிறேன்” என்றார்.
நெற்றியில் உள்ள தோல் மற்றும் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகள் உரிய தொடங்கிய போது பிங்க் நிறத்தில் தோல் மாற துவங்கியுள்ளது. சருமம் உரிய தொடங்கியபோது சிறிது நிவாரணம் கிடைத்துள்ளது.
இயல்பான தோற்றத்தை அடைய ஏழு வாரங்களுக்கு மேல் ஆகியுள்ளது. இப்போது சிரினின் கன்னங்கள் மற்றும் கண்களுக்கு கீழ் பகுதியில் நிறமாற்றங்கள் மட்டுமே உள்ளன.
சூரிய ஒளியில் நேரடியாக நிற்கும் சூழல் வந்தால், சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது முக்கியம். இது புறஊதா கதிர்களில் இருந்து முகத்தை பாதுகாப்பது மட்டுமல்லாமல், சுருக்கங்கள், தேவையற்ற நிறமி உள்ளிட்ட சரும பாதிப்புகளையும் தடுப்பதால் பரிந்துரைக்கப்படுகிறது.
சூரிய குளியல் போட்ட பெண்ணுக்கு, பிளாஸ்டிக் போல் சுருங்கிய நெற்றி..!
Reviewed by Author
on
August 22, 2022
Rating:

No comments:
Post a Comment