நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலைய மின்சார உற்பத்தி பணிகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பம்
அண்மையில் இயந்திரத்தின் ஒரு பகுதியிலுள்ள குழாயொன்று வெடித்ததால், அதனை திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொது முகாமையாளர் அன்ட்ரூ நவமுனி கூறினார்.
இதேவேளை, நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்திலுள்ள இரண்டாவது இயந்திரமும் பராமரிப்பு பணிகள் காரணமாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, நீர் மின் உற்பத்தி தற்போது 50 வீதமாக உள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலைய மின்சார உற்பத்தி பணிகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பம்
Reviewed by Author
on
August 25, 2022
Rating:

No comments:
Post a Comment