சீனாவில் ஜனாதிபதி ஜின்பிங், ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய அங்கம் வகித்தவர் பூ செங்குவா. சீனாவின் நீதித்துறை அமைச்சராகவும் , இருந்தார். இவர் தனது பதவிக்காலத்தில் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்து கொண்டு பல கோடி வரையில் ஊழல் செய்ததாகவும், தனது குடும்பத்தினருக்கு சலுகைகள் செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்கன் நகர நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இதில், நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், செங்குவாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment