அண்மைய செய்திகள்

recent
-

நடத்துனர் இல்லாமல் இயங்கும் அதிநவீன பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது

பொது போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும் தனியார் தொழில்நுட்பக் குழுவிற்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. 

 கையடக்கத் தொலைபேசி செயலி மூலம் நடைமுறைப்படுத்தப்படும் இந்த பொதுப்போக்குவரத்து சேவை தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது அறிமுகம் செய்யப்பட்டது. கொழும்பு கோட்டை, கொம்பனித்தெரு, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, பொரளை, நகர மண்டபம் உட்பட கொழும்பு நகரின் பெரும்பாலான பிரதான நிலையங்களை உள்ளடக்கியதாக இந்த திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பஸ்ஸில் எவ்வளவு தூரம் பயணித்தாலும் 200 ரூபா மாத்திரமே நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக அறவிடப்படவுள்ளது. கையடக்க தொலைபேசியில் உள்ள செயலி மூலம் கட்டணம் செலுத்தப்படுவதால், இந்த பஸ்களுக்கு நடத்துனர் தேவையில்லை என்பது மற்றொரு விசேட அம்சமாகும்


.
நடத்துனர் இல்லாமல் இயங்கும் அதிநவீன பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது Reviewed by Author on October 30, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.