பாதிக்கப்பட்ட பூநகரி பிரதேச கிராஞ்சி சிவபுர மீனவர்கள் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் சிலர் இன்று யாழ் மாவட்ட பிராந்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
-தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அதிகாரிகள் எவரும் தமது இடத்திற்கு வந்து உரிய தீர்வை பெற்றுத் தர முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.என பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கிராஞ்சி இலவன்குடா கடற்பகுதியில் கடலட்டை பண்ணை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இலவன் குடா கடற்பரப்பில், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உட்பட கடற்தொழிலாளர்கள் சிறகு வலை தொழிலின் ஊடாக இறால், நண்டு,மீன் போன்றவற்றை பிடிப்பதை அன்றாட வாழ்வாதார தொழிலாக பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் தற்போது கடலட்டை பண்ணைகள் அமைக்கும் முயற்சிகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதனை தொடர்ந்து கடற்தொழிலாளர்கள் குறித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் சாதகமான முடிவை சம்மந்தப்பட்டவர்கள் வழங்கும் வரை தாம் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
-இந்த நிலையில் மனிதாபிமான பணியில் ஈடுபட்டு வருகின்ற மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பிரதிநிதிகள் சனிக்கிழமை (1) மதியம் குறித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடினர்.
-இதன் போது குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோஇமற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது குறித்த மீனவர்களின் பிரச்சினைகளை குறித்த குழுவினர் கேட்டறிந்தனர்.
இந்த நிலையில் தமக்காக ஒரு அமைப்பு ஆதரவு வழங்கி வருகின்ற நிலையில் தமது உரிமைகளை வென்றெடுக்க உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்டு தமது போராட்ட வடிவை மாற்றி சுழற்சி முறையில் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த நிலையில் 5 வது நாளாக இன்று தமது போராட்டத்தை குறித்த மீனவர்கள் முன்னெடுத்து வருகின்ற நிலையில் மீனவர்களின் பிரதிநிதிகள் சார்பாக ஒரு குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை(4) காலை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு யாழ் பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட பூநகரி பிரதேச கிராஞ்சி சிவபுர மீனவர்கள் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு.
Reviewed by Author
on
October 04, 2022
Rating:

No comments:
Post a Comment