அண்மைய செய்திகள்

recent
-

சீரற்ற காலநிலை காரணமாக 4 பேர் உயிரிழப்பு – 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, 10 மாவட்டங்களில், 3 ஆயிரத்து 18 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களினால் 8 வீடுகள் முழுமையாகவும் 347 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட 69 குடும்பங்களைச் சேர்ந்த 242 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக 4 பேர் உயிரிழப்பு – 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு Reviewed by Author on October 21, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.