கரியாலைநாகபடுவான் கிராம அலுவலரின் ஊழல்கள்
இதே வேளையில் வழக்கு முடிவடைந்த நிலையில் ஞானம் என்பவர் பிடித்த காணியை தொடர்ந்து செய்கைக்கு அனுமதித்து வருகிறார்.
மேலும் பயனாளி ஒருவருக்கு பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட வீட்டுதிட்டத்துடன் கூடிய காணியை சட்டத்திற்கு உட்படாது மத நிறுவனம் ஒன்றிற்கு வழங்கவும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் கிராம அலுவலர்.
பல இளைஞர்கள் தொழில் இன்றி இருக்கும் நெருக்கடியான காலப்பகுதியில் கடைகாணிகள் வழங்க விண்ணப்பங்கள் கோரப்பட்டநிலையில் வெளிநாட்டில் இருக்கும் தனது காதலன் கடை ஒன்று கட்ட இருப்பதாகவும் அதற்கு 20பேர்ச் காணி தேவைபடுவதால் குறித்த காணிகள் வழங்கவுள்ள பகுதிக்கு அண்மையில் உள்ள நீர்பாசன காணியில் எனது அப்பம்மா மீன் வியாபாரம் செய்தது என ஓர் ஆவணத்தை வழங்குமாறு நீர்ப்பாசன தொழில்நுட்ப அதிகாரியை நாடியுள்ளார் கிராம அலுவலர்
கிராம அலுவலருக்கான கடமை நேரம் காலை 8.15 மணிமுதல் மாலை 4.15 வரையாகும்.
இக்கிராம அலுவலர் உரிய நேரத்திற்குவருகை தருவதுமில்லை .அலுவலகத்தில் இருக்கும் நேரத்தில் அலுவலக கதவை உட்புறமாக தாழிட்டுவிட்டு தனது காதலனோடு தொலைபேசியில் கடமை நேரத்தில் உரையாடி வருகின்றார். எனவே இக்கிராம அலுவலர் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என மக்கள் கோரிக்கை உயர் அதிகாரிகள் முன் வைக்கின்றார்கள்
கரியாலைநாகபடுவான் கிராம அலுவலரின் ஊழல்கள்
Reviewed by Author
on
November 13, 2022
Rating:

No comments:
Post a Comment