ஊடகங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்!
தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் ஊடக அமைச்சினால் நிபந்தனைகளுக்கு உட்பட்டே வழங்கப்பட்டுள்ளதால், ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அந்த நிபந்தனைகள் மீறப்பட்டால், சம்பந்தப்பட்ட அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரத்தைத் திரும்பப் பெறும் அதிகாரம் ஊடக அமைச்சருக்கு உள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாட்டின் மக்களின் சுகாதார அறிவை மேம்படுத்துவதற்காகவும் சுகாதாரத் தகவல்களைப் பரப்புவதற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஊடகவியலாளர்களின் பணியைப் பாராட்டுவதற்காக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "சௌக்கிய அண்டஹெர - 2025" கௌரவிப்பு விழா, அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இன்று (29) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்றது.
அங்கு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெளிவுபடுத்தினார்.
அத்துடன், ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசைக்கும் ஒளிபரப்பு அனுமதிப்பத்திரம் தற்காலிக அனுமதிப்பத்திரமாகவே வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்!
Reviewed by Vijithan
on
December 29, 2025
Rating:
Reviewed by Vijithan
on
December 29, 2025
Rating:


No comments:
Post a Comment