கோர விபத்தில் ஒருவர் பலி - 10 பேர் வைத்தியசாலையில்
மீகஹதென்ன பகுதியில் இன்று (16) இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர் வெளிநாட்டிற்கு சென்றவரின் மனைவியின் தாய் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வேன் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால் வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்கள் மீகஹதென்ன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் அவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
கோர விபத்தில் ஒருவர் பலி - 10 பேர் வைத்தியசாலையில்
Reviewed by Author
on
November 16, 2022
Rating:

No comments:
Post a Comment