சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.
இவற்றின் பெறுமதி 5,151,904 அமெரிக்க டொலர்களாகும்.
சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் மனிதாபிமான உதவியின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சர்வதேச மருந்துகள் தொடர்பான ஒருங்கிணைப்பு அதிகாரி, வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சீன துணை தூதுவரினால் இந்த மருந்துப் பொருட்கள் சுகாதார அமைச்சிடம் இன்று(07) கையளிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
No comments:
Post a Comment