FIFA உலக கோப்பை கால்பந்து: இறுதி போட்டிக்கு முன்னேறிய பிரான்ஸ் அணி!
போட்டியின் 5 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் Theo Hernández முதல் கோல் அடித்தார்.
அதனடிப்படையில் முதல் பாதி முடிவில் 1 - 0 என பிரான்ஸ் முன்னிலை வகித்தது.
தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதியில் ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணி சார்பில் போட்டியின் 79 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் Randal Kolo Muani கோல் அடித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்க மொரோக்கோ அணி போராடியும் கோல் அடிக்க முடியவில்லை.
அதனடிப்படையில் போட்டி முடிவில் 2 - 0 என பிரான்ஸ் அணி வெற்றி பெற்ற இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி ஆர்ஜன்டீனா அணியை எதிர் கொள்ளவுள்ளது.
FIFA உலக கோப்பை கால்பந்து: இறுதி போட்டிக்கு முன்னேறிய பிரான்ஸ் அணி!
Reviewed by Author
on
December 15, 2022
Rating:

No comments:
Post a Comment