தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தில் இருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்பு.
குறித்த பொதியை சோதனை செய்த போது ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 95 கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பேசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
-அதனைத் தொடர்ந்து பின் இருக்கையில் இருந்த பயணி ஒருவர்,மற்றும் சாரதி,நடத்துனர் ஆகியோர் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்தினர்.
சுமார் 2 மணித்தியாலங்களின் பின் அவர்கள் விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டனர்.
இதனால் குறித்த பேருந்தில் பயணித்த பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்த நிலையில் தமது பயணங்களை தொடர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது
தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தில் இருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்பு.
Reviewed by Author
on
December 31, 2022
Rating:

No comments:
Post a Comment