அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் புகையிரதம் முன் பாய்ந்து இளம் குடும்பஸ்தர் தற்கொலை- வெளியான காரணம்

கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி வந்த புகையிரதத்தின் முன் குடும்பஸ்தர் ஒருவர் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் திங்கட்கிழமை (19) இரவு மன்னாரில் இடம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் சில விடையங்கள் வெளியாகி உள்ளது. கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி வந்த புகையிரதத்தின் முன் குடும்பஸ்தர் ஒருவர் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் திங்கட்கிழமை (19) இரவு மன்னாரில் இடம் இடம்பெற்றுள்ளது. இவ் சம்பவம் மன்னார் உயிலங்குளம் பொலிஸ் பிரிவில் மாதோட்டம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் திங்கள் கிழமை (19) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

 புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரிழந்தவர் மணற்குளம் தண்ணீர் தாங்கி கிராமத்தைச் சேர்ந்த நல்லதம்பி நகுலேஸ்வரன் (வயது-37) என அடையாளம் காணப்பட்டுள்ளார் உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் குறித்த சம்பவத்தின் போது அவர் தலையில் தலைக்கவசம் அணிந்திருந்ததாகவும் அவ்வேளையில் மது போதையில் இருந்து உள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. குறித்த புகையிரதம் தலைமன்னார் நோக்கி செல்லும் போது அவர் ரயில் பாதையில் உள்ள கட்டையில் பியர் போத்தலுடன் இருந்ததாகவும் இப்பொழுது ரயில் சாரதி அவர் இருந்ததை அவதானித்து ரயில் ஒலியை ஒலிக்கச் செய்தும் ரயில் வேகத்தை குறைத்து வந்து கொண்டிருந்த போது ரயில் அருகில் வந்ததும் ரயிலுக்கு முன் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் பின் இவரின் சடலத்தை உடன் ரயிலில் ஏற்றிக்கொண்டு மன்னார் புகையிரத நிலைய அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு ரயில் சென்றதாகவும் விசாரணை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மரண விசாரனையும் பிரேத பரிசோதனையும் இடம்பெற்றது. 

இவ் மரணம் தொடர்பாக மன்னார் மரண விசாரணை அதிகாரி எஸ். ஈ. குமண குமார் மேற்கொண்ட விசாரணையில் இறந்தவரின் மனைவி மற்றும் தாயார் வழங்கிய வாக்குமூலத்தின் தெரிவிக்கப்படுவதாவது, இறந்தவரின் மனைவி மேரி பிரே மணி நகுலேஸ்வரன் (வயது - 29) சாட்சி கூறுகையில் எங்களுக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் தனக்கும் கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சனையின் காரணமாக நாங்கள் ஏழு எட்டு மாதங்களாக பிரிந்திருப்பதாகவும்,இவரின் குடிபோதையினால் தங்கள் குடும்பங்களில் அடிக்கடி பிரச்சனைகள் தலை தூக்குவதும் பொலிசில் முறையீடுகள் செய்வதுமாக இருந்த நிலையிலேயே தாங்கள் பிரிந்து இருந்ததாகவும் தெரிவித்தார். அதே நேரத்தில் இறந்தவரின் தாயார் புஸ்பவதி நல்லதம்பி (வயது 57) சாட்சி கூறுகையில், இறந்தவர் தனது மகன் என்றும் அவர் குடும்பத்துடன் பிரிந்து வந்து சில காலமாக என்னுடன் வசித்து வந்ததாகவும் இவர் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ முற்பட்டு வந்ததாகவும் ஆனால் அது கை கூடாத நிலையில் அவர் விரக்தியுடன் இருந்து வந்ததாகவும் இதனாலேயே அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என சந்தேகம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

 இறந்தவரின் மனைவி தான் இவருடன் வாழ விரும்பவில்லை என ஏற்கனவே பொலிசாரிடம் தெரிவித்திருந்தமை யாலும் மகன் தன்னுடன் வாழ்ந்தமை யாலும் சடலத்தை தன்னிடம் ஒப்படைக்கும்படி தாய் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சடலத்தை தாயிடம் ஒப்படைக்கும்படி மரண விசாரணை அதிகாரி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.






மன்னாரில் புகையிரதம் முன் பாய்ந்து இளம் குடும்பஸ்தர் தற்கொலை- வெளியான காரணம் Reviewed by Author on December 21, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.