மன்னார் நானாட்டானில் வயோதிப தம்பதியை தாக்கி பணம் நகை கொள்ளை.
மூன்று கொள்ளையர்கள் வீட்டினுள் நுழைந்த நிலையில் ஆயுதங்களால் தம்பதியினர் இரு வரை சரமாரியாக தாக்கி பணம் மற்றும் தாலிக்கொடி உட்பட 30 பவுனுக்கு மேற்பட்ட நகைகளை களவாடிச் சென்றுள்ளனர்.
பலத்த காயங்களுக்கு உள்ளான பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார்,முருங்கன், பொலிஸார் மற்றும் தடயவியல் பிரிவினர் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு பார்வையிட்ட பின் முருங்கன் பொலிஸார் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த வீட்டில் சில வருடங்களுக்கு முன்பும் பாரிய திருட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் நானாட்டானில் வயோதிப தம்பதியை தாக்கி பணம் நகை கொள்ளை.
Reviewed by Author
on
December 16, 2022
Rating:

No comments:
Post a Comment