முசலி சிலாவத்துறை கடற்பரப்பில் இருந்து தொழிலுக்குச் சென்று காணாமல் போன இரு மீனவர்கள் மீட்பு.
19 மற்றும் 23 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் இவ்வாறு மீன் பிடிக்க கடலுக்புச்செக்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.குறித்த இருவரையும் சக மீனவர்கள் தொடர்ச்சியாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் புத்தளம் கற்பிட்டி கடல் பகுதியில் இயந்திரம் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட படகை அவதானித்த கற்பிட்டி மீனவர்கள் குறித்த இருவரையும் மீட்டனர்.
இதன் போது குறித்த படகில் இருந்த இருவரும் சிலாவத்துறை காயாக்குளிப் பகுதியில் காணாமல் போன இளைஞர்கள் என்பதை உறுதிப்படுத்திய கட்பிட்டி மீனவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (27)மதியம் 12.30.மணியளவில் பழுதடைந்த படகு மற்றும் இரண்டு மீனவ இளைஞர்களையும் காயாக்குளி மீனவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சென்று காயாக்குளி மீனவர்களுடன் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது
முசலி சிலாவத்துறை கடற்பரப்பில் இருந்து தொழிலுக்குச் சென்று காணாமல் போன இரு மீனவர்கள் மீட்பு.
Reviewed by Author
on
December 28, 2022
Rating:

No comments:
Post a Comment