தலைமன்னாரில் தொடர்ச்சியாக திருடப்பட்டு வரும் பாலன் குடில் சிற்பங்கள்.
இவ்வாறு ஒவ்வொரு வருடமும் மார்கழி 24.12.2022 அன்று தலைமன்னார் மேற்கு மக்களினால் தமது பிரதான முச்சந்திக்கு அருகாமையில் பாலன் கொட்டில் மற்றும் கிறிஸ்மஸ் மரம் வைப்பது வழமையான ஒரு நிகழ்வாகும்.
இவ்வாறு அமைக்கப்பட்டுவரும் பாலன் கொட்டில்களில் உள்ள சிற்பங்களை திருடுவது கடந்த 2019ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பாலன் கொட்டிலில் இருந்து புனித சூசையப்பர் மற்றும் அன்னை மரியாளின் சிற்பங்கள் திருடப்பட்டிருந்தது.
கடந்த வருடம் தலைமன்னார் ஸ்ரேசன் ஆலயத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த பாலன் கொட்டிலில் இருந்த பாலன் இயேசுவின் திருச்சுருபம் திருடப்பட்டிருந்தது.
அதே போன்று இவ் வருடம் பிரதான வீதியில் வைக்கப்பட்டிருந்த பாலகன் இயேசுவின் திருச்சுருபம் திருடப்பட்டுள்ளது.
இச் செயற்பாடானது தலைமன்னார் ஸ்ரேசன் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக தலைமன்னார் வாழ் கத்தோலிக்க மக்களுக்கு வேதனை அளித்துள்ளது.
இச் செயற்பாடானது இனம் மாதங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்று விப்பதற்காக குறிப்பிட்ட குழுவினர் மேற்கொண்டு வருகின்றனரோ? என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. இவ் விடயம் தொடர்பாக தலைமன்னார் மக்களினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது
தலைமன்னாரில் தொடர்ச்சியாக திருடப்பட்டு வரும் பாலன் குடில் சிற்பங்கள்.
Reviewed by Author
on
December 28, 2022
Rating:

No comments:
Post a Comment