அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி தாராபுரம் பகுதியில் விபத்து-இளம் குடும்பஸ்தர் மரணம்.

மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இன்று வியாழக்கிழமை(29) காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மன்னார் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான ஆனந்த் கன்பியூசியஸ் (விஜய்-வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 -மன்னாரில் இருந்து பேசாலை நோக்கி பயணித்த பொலிஸ் டிபென்டர் ரக வாகனமும், பேசாலை வீதியூடாக மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிலும் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. -குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் வீதியில் தூக்கி வீசப்பட்ட நிலையில்,படுகாயமடைந்த நிலையில்,வீதியால் சென்றவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்









.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி தாராபுரம் பகுதியில் விபத்து-இளம் குடும்பஸ்தர் மரணம். Reviewed by Author on December 29, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.